search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோ வழக்கு"

    • சிறுவர்களின் பருவக் காதல் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவை.
    • பேருந்து படிக்கட்டில் பயணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படுகிறது

    சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:

    மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படுகின்றன. நீங்கள் யாரும் உங்கள் இளம் வயதில் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்தது இல்லையா? காதல் திருமண விவகாரங்களில் சிறுவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்வது அவர்களின் வாழ்க்கையை சீர்குலைத்து எதிர்காலத்தை பாழாக்கும். சிறுவர்கள் பருவக் காதல் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவை. அது குற்றச்செயல் இல்லை.

    மாணவர்கள் தற்போது ஸ்டைலாக முடிவெட்டி கொள்கிறார்கள். அந்த மாணவர்களை பிடிக்கும் நீங்களெல்லாம் அந்த காலத்தில் ரவிசந்திரன், எம்.ஜி.ஆர் போன்று ஹேர்ஸ்டைல் வைத்து கொண்டதில்லையா? அந்த காலத்து நடிகர்கள் போல பெல் பாட்டம் பேண்ட் அணிந்ததில்லையா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 17 வயது சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக தெரிகிறது.
    • தாரமங்கலம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் தேடி வந்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டி கிராமம் மிளகாய்காரனுர் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகன் ரகுபதி (வயது 23). பட்டதாரியான இவர், கடந்த 13-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், தாரமங்கலம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவர்களை கண்டுபிடித்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், திருத்தணி முருகன் கோவிலுக்கு கடத்தி சென்று சிறுமிக்கு ரகுபதி தாலி கட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஆசிரியர் பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
    • போலீசார் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன்(35). இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் சமூகஅறிவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக இதேபள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இதனைதொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியில் திரண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். இதனைதொடர்ந்து கம்பம் போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    • வீடியோவை வெளியிட்ட கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜிகணேசன் என்பவரை கைது செய்தனர்.
    • கைதான மாணவர் பண்ருட்டி சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து சிதம்பரம் டவுன், அனைத்து மகளிர் நிலைய போலீசார் மாணவி, மாணவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவி சிதம்பரம் அருகே உள்ள வெங்காயதளமேடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும், இவர் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தது தெரியவந்தது. மாணவிக்கு தாலி கட்டிய மாணவர் புவனகிரி அருகே உள்ள வடகறிராஜபுறத்தை சேர்ந்தவர் என்றும் இவர் கீரப்பாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் மாணவி கடலூரில் உள்ள காப்பகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்ட நபர் மீது மாணவியின் பெற்றோர் சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தனர்.

    அதன் அடிப்படையில் வீடியோவை வெளியிட்ட கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜிகணேசன் என்பவரை கைது செய்தனர். இவர் சமூக அவலங்களை வீடியோ எடுத்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதைத்தொடர்ந்து மாணவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இவர் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். கைதான மாணவர் பண்ருட்டி சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து கடலூர் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள மாணவியிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு சமூகநலத்துறை அதிகாரிகள் கவுன்சிலிங் வழங்கி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விசாரணையில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்தது தெரியவந்தது
    • சிறுமியின் உறவினர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.

    சென்னை:

    சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தி பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, அதற்கு உடந்தையாக இருந்த எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி நிருபர் வினோபாஜி, பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையம் விசாரித்த இந்த வழக்கில் 22 பேர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். இரு பெண்கள் உள்பட மற்ற 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். மீதமுள்ள 22 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், மாரீஸ்வரன் என்பவர் இறந்துவிட்டார்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ராஜலட்சுமி முன்பு நடந்து வந்தது.

    அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மதன்குமார், சாயிதா பானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், தனியார் தொலைக்காட்சி நிருபர் வினோபாஜி, கிரிதரன், ராஜசுந்தரம், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ)அஜய் கண்ணன், எஸ்.பி.ஆர்.கண்ணன் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என அறிவித்தார்.

    இவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று நீதிபதி அறிவித்தார். சிறுமியின் சித்தி, சித்தப்பா உள்பட உறவினர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரன், சிவில் சப்ளை அதிகாரி கண்ணன், உள்ளிட்ட 13 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    • விரைவு நீதிமன்றம் அமைக்க மத்திய உள்துறை அமைச்கத்தின் அனுமதி கோரப்பட்டது.
    • மத்திய அரசின் விரைவு நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் போக்சோ விரைவு நீதிமன்றத்தை புதுவையில் அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருகிறது.

    இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்க மத்திய உள்துறை அமைச்கத்தின் அனுமதி கோரப்பட்டது. மத்திய அரசின் விரைவு நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் போக்சோ விரைவு நீதிமன்றத்தை புதுவையில் அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.

    இந்த நீதிமன்றம் முதல்கட்டமாக ஓராண்டுக்கு தனி கட்டிடம் இன்றி, தற்போதுள்ள வளாகத்திலேயே தனியாக செயல்படும். இதற்கு ஒரு நீதிபதி, 7 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நீதிமன்றத்தில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மட்டும் தனித்துவமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்புகள் விரைவாக அறிவிக்கப்படும்.

    மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதால் விரைவில் புதுவையில் போக்சோ விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது.

    • காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
    • முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு சிறுமியை விருந்தாக்கி உள்ளனர்

    சென்னை:

    சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தி பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

    கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த சிறுமியை சங்கிலி தொடர்போல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு விருந்தாக்கியது தெரியவந்தது.

    இவ்வழக்கில் மொத்தம் 26 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, 7 பெண்கள், காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், சிறுமியின் உறவினர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 19ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

    • 10-ம் வகுப்பு மாணவிகள் 2 பேரை மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு, பலாத்காரம் செய்து வந்ததாக குற்றச்சாட்டு.
    • மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மைசூரு நஜர்பாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தின் சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூா்த்தி முருகா சரணரு. இந்த மடம் சார்பில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சித்ரதுர்கா முருக மடத்தில் செயல்பட்டு வந்த பள்ளியில் தங்கி படித்து வந்த 10-ம் வகுப்பு மாணவிகள் 2 பேரை மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு, 1½ ஆண்டுகளுக்கும் மேலாக பலாத்காரம் செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட மாணவிகள் மைசூருவில் உள்ள சமூக சேவை அமைப்பில் இதுபற்றி தெரிவித்தனர். இதையடுத்து மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மைசூரு நஜர்பாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் மைசூரு நஜர்பாத் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அவருக்கு உடந்தையாக இருந்ததாக சித்ரதுர்காவில் உள்ள அக்கமாதேவி வஸ்தி நிலையத்தின் வார்டன் ரஷ்மி, பசவதித்யா, பரமசிவய்யா, வக்கீல் கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    14 வயது சிறுமி, உறவினர் வீட்டின் எதிரே, தனியாக, செல்போனை வைத்துகொண்டு விளையாட்டி கொண்டி ருந்தார்.

    காரைக்கால்:

    தமிழகப்பகுதியை சேர்ந்த ஒருவர், 14 வயது சிறுமி உள்ளிட்ட தனது குடும்பத்துடன் காரைக்கால் நகர் பகுதி யில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். அப்போது அந்த 14 வயது சிறுமி, உறவினர் வீட்டின் எதிரே, தனியாக, செல்போனை வைத்துகொண்டு விளையாட்டி கொண்டி ருந்தார். அப்போது அங்குவந்த அதேபகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மைக்கேல் (வயது23) என்பவர், ஆற்றில் பிடித்த உயிருள்ள நண்டை கொண்டுவந்து, சிறுமியின் தொடையில் விட்டுள்ளார்.

    பயந்துபோன சிறுமி சத்தம் போடவே, சிறுமியின் கை களை பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் மற்றும் உறவி னர்கள், மைக்கேலின் செயலை பார்த்து, மைக்கேலை பிடித்து அடித்து, உதைத்து, காரைக்கால்நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் மைக்கேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • வேலுசாமி, சிறுமியிடம் இங்கு நடந்ததை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டல் விடுத்தார்.
    • வேலுசாமிக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    கவுண்டம்பாளையம்

    கோவை மேட்டுப்பா ளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது வீட்டின் அருகே 9 வயது சிறுமி வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று சிறுமி, அந்த பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது வேலுசாமி சிறுமியை கையை பிடித்து இழுத்து தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    பின்னர் கதவை மூடி விட்டு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியான சிறுமி சத்தம் போட்டார். இதையடுத்து வேலுசாமி, சிறுமியிடம் இங்கு நடந்ததை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து சிறுமி துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வேலுசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கடந்த 2018-ம் ஆண்டு நடந்தது.

    இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், கைதான வேலுசாமிக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • 5 மாத கர்ப்பிணியாக உள்ள சிறுமி, புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
    • சிறுமியின் விபரங்களை பதிவு செய்தபோது அவருக்கு 18 வயது நிரம்பும் முன்னரே திருமணம் நடந்தது தெரியவந்தது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் அய்யன்குமார்(வயது 29).

    இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ள அந்த சிறுமி, புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

    அப்போது அவரது விபரங்களை பதிவு செய்தபோது சிறுமிக்கு 18 வயது நிரம்பும் முன்னரே திருமணம் நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வாசுதேவநல்லூர் யூனியனை சேர்ந்த ஊர்நல அலுவலர் முத்தாத்தாள் புளியங்குடி போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 2 பேரின் பெற்றோர் சம்மதத்துடன் சிறுமிக்கு திருமணம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அய்யன்குமார் மற்றும் அவரது பெற்றோர் மீதும், சிறுமியின் பெற்றோர் மீதும் போலீசார் குழந்தை திருமணம், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி வழக்கு உள்பட மொத்தம் 8 வழக்குகள் காசி மீது பதிவு செய்யப்பட்டன.
    • இளம்பெண் அளித்த பாலியல் புகார் மீதான விசாரணை நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவரது மகன் காசி (வயது 27). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் என்ஜினியர், நாகர்கோவில் பகுதியை சோ்ந்த 27 வயதுடைய இளம்பெண் ஆகியோர் பாலியல் புகார் அளித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே காசி மீது அடுத்தடுத்து இளம்பெண்கள் புகார் அளித்தனர். அந்த வகையில் வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி வழக்கு உள்பட மொத்தம் 8 வழக்குகள் காசி மீது பதிவு செய்யப்பட்டன.

    இந்த வழக்குகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி காசியின் நண்பர் ஒருவரை கைது செய்தனர்.மேலும் காசிக்கு உதவும் வகையில் பல்வேறு சாட்சியங்களை அழித்ததாக தங்கபாண்டியனையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் காசி மற்றும் தங்கபாண்டியன் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பலமுறை ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    ஏற்கனவே கந்துவட்டி, போக்சோ உள்பட 6 வழக்குகளுக்கு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாகர்கோவில் இளம்பெண் அளித்த பாலியல் புகார் மீதான விசாரணை நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கை நீதிபதி சசிரேகா விசாரித்து வருகிறார். வழக்கு விசாரணைக்கு இன்று காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் நேரில் ஆஜராகினர்.

    இதுவரை 12-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் நேரில் வந்து வாக்கு மூலம் அளித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று டாக்டர்கள் வந்து சாட்சி அளித்தனர். பின்னர் காசி மற்றும் தங்கபாண்டியனிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காசி மற்றும் தங்கபாண்டியன் மீண்டும் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ×